Sep 6, 2025 - 09:28 AM -
0
இன்று (06) அதிகாலை 1:38 மணியளவில், நீர்கொழும்பு குட்டுதுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
எனினும், இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நிதித் தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.