செய்திகள்
பாணந்துறையில் விற்பனை நிலையம் மீது துப்பாக்கிச் சூடு

Sep 6, 2025 - 10:35 AM -

0

பாணந்துறையில் விற்பனை நிலையம் மீது துப்பாக்கிச் சூடு

இன்று (06) காலை பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்த பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

 

அடையாளம் தெரியாத இருவர் N99 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

எனினும், துப்பாக்கிச் சூடு நடந்தபோது விற்பனை நிலையத்தில் ஒரு பெண் இருந்தபோதிலும், துப்பாக்கித் தாக்குதல் விற்பனை நிலையத்தின் குளிர்சாதனப் பெட்டியைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

அலுபோமுல்ல பொலிஸார் மற்றும் பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

Comments
0

MOST READ