Sep 6, 2025 - 02:17 PM -
0
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (06) நிறைவடைந்துள்ளது.
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45 ஆவது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்ட அகழ்வு, செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ள நீதிமன்ற வழக்கு விசாரணைக்குப் பிறகு, முன்மொழியப்பட்ட பட்ஜெட்டும் இடைக்கால நிபுணர் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தீர்மானிக்கப்படும்.
தடயவியல் அகழ்வாய்வுத் தளம் 1, ஆரம்பத்தில் 11 மீட்டர் நீளமும் அகலமும் கொண்டதாக இருந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது அது விரிவுபடுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டு தற்போது 23.40 மீட்டர் நீளமும் 11.20 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது.
இதுவரை இடம்பெற்ற அகழ்வு நடவடிக்கையில் 14 சிக்கலான முறையில் உள்ள குவியல்களாகவும் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன .72 இற்கும் மேற்பட்ட சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
--