Sep 6, 2025 - 03:18 PM -
0
நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 25 ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் நேற்று (05) காலை ஹட்டன் லா எடம்ஸ் விருந்தகத்தில் அதன் தலைவர் டக்ளஸ் நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது போது அடுத்த நிர்வாக ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர்.
கடந்த இரு தசாப்தங்களாக தலைவராக செயற்பட்டு வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் டக்ளஸ் நாணயக்கார ஒன்றியத்தின் சிரேஷ்ட காப்பாளராக தெரிவு செய்யப்பட்ட அதே வேளை முன்னாள் செயலாளர் காமினி பண்டார இலங்கன் திலக்க சிரேஷ்ட ஆலோசகராக தெரிவு செய்யப்பட்டார்.
புதிய நிர்வாக சபையின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் தியாகு சுப்ரமணியம், செயலாளராக ஊடகவியலாளர் சுதத் செல்லஹேவா தெரிவு செய்யப்பட்டதுடன், ஊடகவியலாளர் எம்.ராமச்சந்திரன் மீண்டும் பொருளாளராக தெரிவு செய்யப்பட்டார்.
உபதலைவராக ஜி.வீரக்கொடி மற்றும் உப செயலாளராக டி.சந்திரமோகன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர், சிரேஷ்ட ஊடவியலாளர் சிவலிங்கம் சிவகுமாரன் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.
பதினொரு பேர் கொண்ட நிர்வாக சபையில் மேற்படி தெரிவு செய்யப்பட்ட ஆறு பேர் உட்பட பானா தங்கம், சுரேஜ் ரொஜிஸ்டர், இந்திக்க ரொஷான், செ.தி.பெருமாள், சதீஸ்குமார் ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
--

