Sep 6, 2025 - 06:24 PM -
0
சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு 20 போட்டி இன்று (6) இடம்பெறுகின்றது
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இந்தப் போட்டி ஹராரேயில் இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமானது.
போட்டியில் முதலாவதாக துடுப்பாடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 80 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் கமில் மிசார 20 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி சிம்பாப்வே அணிக்கு 81 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில் 1 - 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.