உலகம்
சீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ட்ரம்ப்?

Sep 7, 2025 - 08:18 AM -

0

சீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ட்ரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் தென்கொரியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ள தயாராகி வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

தென்கொரியாவில் இடம்பெறவுள்ள ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) வர்த்தக அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதியும் அவரது ஆலோசகர்களும் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது. 

இதன்போது சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க ஜனாதிபதி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அமெரிக்க ஜனாதிபதியினால் உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான வரி தற்போது பேசு பொருளாக காணப்படுகின்றது. 

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிகளவான வரியை அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ளார். 

இந்த சூழலில் இந்திய, சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். 

இதனை அடுத்தே ட்ரம்ப் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்குடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. 

எவ்வாறாயினும் இந்த விஜயம் தொடர்பில் வௌ்ளை மாளிகை எவ்வாறான உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05