சினிமா
திருமணத்தின் பின் கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை

Sep 7, 2025 - 08:42 AM -

0

திருமணத்தின் பின் கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை

நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

திருமணத்திற்கு பிறகும் கூட படங்களில் தொடர்ந்து நடித்து தான் வருகிறார். குறிப்பாக கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார். 

சமீபத்தில் ஒரு பேட்டியில் ரகுலிடம் திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேள்வி எழுந்தது. 

இதற்கு அவர் கூறியதாவது, "திருமணம் நடிகைகளின் வளர்ச்சிக்கோ, முன்னேற்றத்திற்கோ தடை போடக்கூடாது. திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை. 

திருமணத்திற்கு பிறகு தான் என் அழகும், கவர்ச்சியும் கூடியுள்ளதாக உணர்கிறேன்" என கூறினார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05