Sep 7, 2025 - 12:42 PM -
0
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் இன்று (7) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவாவும் பெலாரஸ் வீராங்கனை சபலென்காவும் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-3, 7-6 (3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றார்.

