Sep 7, 2025 - 01:14 PM -
0
உக்ரைனின் கிவ் நகரில் உள்ள அரச கட்டிடம் ஒன்றின் மீது, ரஷ்யா பாரிய வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ரஷ்ய தாக்குதலில் முதன்முறையாக உக்ரைனின் அரச கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளதாக உக்ரைனிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
கூரைப்பகுதி மற்றும் மேல் பகுதியில் உள்ள மாடிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா ஒரே இரவில் உக்ரைனுக்குள் 805 ட்ரோன்களையும் 13 ஏவுகணைகளையும் ஏவியதாகவும், உக்ரைனிய பாதுகாப்பு படை அவற்றில் 751 ட்ரோன்களையும் நான்கு ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை ரஷ்யா ஆரம்பித்த நிலையில், நாளொன்றில் உக்ரைனை தாக்க பயன்படுத்திய அதிகபட்ச ட்ரோன்களின் எண்ணிக்கை இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

