Sep 9, 2025 - 09:25 AM -
0
இன்று (09) சந்திரன் மீன ராசியில் இருக்கிறார். இன்று மரண யோகம் உள்ளது. இன்று கடக ராசியின் ஆயில்யம், சிம்மத்தின் மகம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம். இன்று கிரகங்களின் அமைப்பால் உருவாகும் சர்வசித்தி யோகம், கஜகேசரி யோக பலன் நிறைந்த நாள்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று தொழில் நிமித்தமான பயணங்கள் செல்ல நேரிடும். அது உங்களுக்கு லாபத்தை தரக்கூடியதாக அமையும். குடும்ப உறவுகளின் ஆதரவு கிடைக்கும் என்பதால் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்களின் துணையிடமிருந்து மரியாதை கிடைக்கும். வணிகத்தில் நேர்மறையான பலன்கள் நிதி நிலையை மேம்படுத்தும். உங்களின் வருமானம் அதிகரிக்க கூடிய நாள். இன்று நீங்கள் எந்த திட்டங்களை செயல்படுத்தினாலும் அதில் பிரகாசமான நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். வீட்டில் விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
ரிஷப ராசிபலன்
ரிஷபம் ராசியை சேர்ந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இன்று உங்களின் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வேலை தொடர்பாக கூடுதல் பணி சுமை உங்கள் தோள் மீது வரும். இன்றும் குடும்பத்திலும் பணியிடத்தில் சில முக்கிய பொறுப்புகள் ஏற்பீர்கள். இன்று எந்த விதமான விவாதங்களிலும் இருந்து விலகி இருப்பது நல்லது. உங்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்கும். எதிரிகளை வெல்வீர்கள்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு அரசியல் தொடர்பான முன்னேற்றம் அடையும். உங்களுக்கு இருந்த தடைகள் விலகும். உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் துணையுடன் நேரத்தை செலவிட நினைப்பீர்கள். இன்று உங்கள் மனதில் புதிய ஆற்றலை உணர்வீர்கள். உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும். இன்று சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் அடைவார்கள். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தைகளின் தரப்பில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
கடக ராசி பலன்
கடக ராசி சேர்ந்தவர்கள் இன்று தங்களின் தொழில் தொடர்பாக பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. வெளியூர், வெளிநாடு தொடர்பான தொழில், வேலைகள் நிறைய நன்மைகள் கிடைக்கும். உங்களின் எதிர்காலம் வலுவாக இருக்கும். இன்று நிதிநிலையை மேம்படுத்தக்கூடிய நாளாக அமையும். உங்கள் செயல்பாடுகளுக்கு முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை தொழில் ரீதியாக உதவியாக இருக்கும். குடும்பத்தின் இளைய நபர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளுடன் விளையாடி மகிழ்வீர்கள்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு கடின உழைப்பிற்கான நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சில சாதகமற்ற சூழலால் செலவுகள் அதிகரிக்கும். இன்று உங்களின் சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பணம் பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பது போன்ற நல்ல செய்திகள் தேடி வரும். இன்று நாள் முழுவதும் உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். காதல் வாழ்க்கையில் சந்தித்து வரும் சிக்கல்கள் தீரும். இன்று உங்களுக்கு கலவையான பலன் கிடைக்கும் நாளாக அமையும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு பழைய கடன் மற்றும் நோய்களிலிருந்து விடுபட முடியும். சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அது தொடர்பான பயணங்களில் செல்ல வாய்ப்புகள் உள்ளது. இன்று பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். உங்களின் நிதிநிலை முன்னேற்றம் அடையும். உங்கள் பொறுப்புகளை உணர்ந்து கடின உழைப்புடன் செயல்பட்டால் வெற்றி அதிகரிக்கும். நீண்ட காலத்திற்கு பிறகு உங்கள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று விருந்து விழாக்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி சேர்ந்தவர்கள் இன்று கவனமாக செயல்படவும். இக்கட்டான நேரத்தில் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களின் செயல்பாடு உங்களை நினைத்து பெருமை அடைய செய்யும். அரசாங்கத்தின் மூலம் புதிய திட்டத்தின் கீழ் சலுகை கிடைக்கும். என்ற தொழில் செய்யக்கூடியவர்கள் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் பெறுவீர்கள். மாணவர்கள் தங்களின் படிப்பில் வெற்றியடைய கடின உழைப்பு தேவைப்படும். இன்று உங்களின் முக்கிய பொருட்களை கவனமாக வைத்திருக்கவும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி சேர்ந்தவர்கள் இன்று காதல் வாழ்க்கையில் இனிமையான சூழ்நிலை நிலவும். இன்று நண்பர்களே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். இன்று உங்களின் செயல்பாடுகளால் மனதில் திருப்தி அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு மரியாதை பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விலங்குவார்கள். இன்று புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முயற்சி இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியை சேர்ந்தவர்கள் வேலை தேடும் நபர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களை சுற்றி உள்ள சூழல் சாதகமாக இருக்கும். சக ஊழியர்களுடன் சேர்ந்து வேலையை முடிக்க செயல்படுவீர்கள். இன்று உங்களின் பொறுமை மற்றும் மென்மையான செயல்பாடு குடும்பத்தில் அமைதியை கொண்டு வரவும். பணியிடத்தில் சில தவறான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். இது வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்க கூடியதாக இருக்கும்.
மகர ராசி பலன்
மகரம் ராசியை சேர்ந்த நபர்கள் இன்று எதிலும் கவனமாக இருக்கவும். குறிப்பாக வண்டி வாகனம் ஓட்டும் போது நிதானத்தை கடைப்பிடிக்கவும். தொழில் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பண ஆதாயம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும். இன்று குழந்தைகளின் உடல் நலம் தொந்தரவுகள் ஏற்படலாம். இதனால் மன அழுத்தம் ஏற்படும். இன்று புதிதாக அறிமுகமான நபர்கள் மூலம் லாபகரமான வாய்ப்புகள் பெறுவீர்கள். இன்று பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனமாக இருக்கவும். ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடவும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி சேர்ந்தவர்கள் இன்று அரசியலில் உள்ளவர்கள் சமூகத் தொண்டுகள் மூலம் நல்ல பெயர்கள் பெற வாய்ப்புகள் உண்டு. முதலீடு செய்ய நினைப்பவர்கள் நிதானமாகவும் வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற செயல்படுவது நல்லது. உங்கள் பேச்சில் மென்மையை கடைப்பிடிக்கவும். சில பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. திருமண வாழ்க்கையில் உள்ள கருத்து வேறுபாடுகள் தீரும். இன்று வேலையை செய்தாலும் அது உங்களின் அனுபவம் உறுதுணையாக இருக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள்.
மீன ராசி பலன்
மீன ராசியை சேர்ந்தவர்கள் குழந்தைகளிடமிருந்து சில நன்மைகள் பெறுவார்கள். அவர்களின் செயல்பாடு மரியாதையை பெற்றுத்தரும். இன்று மாணவர்கள் படிப்பு தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்களின் மூலமாக ஆதரவை பிரிவிற்கு. உங்களின் குடும்ப எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். உங்களின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை தரும். இன்று இளைஞர்கள் தங்களின் திறமைகளை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். செல்வாக்கு உயரும். முக்கிய முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்கவும்.

