Sep 10, 2025 - 11:32 AM -
0
யாழ்ப்பாணம் - இணுவில், மருதனார்மடம் - காங்கேசன்துறை வீதியில் ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் வெங்கடேஸ்வரர் ஆலயம் இரண்டிற்கும் நடுவில் இன்று (10) காலை 08.00 மணியளவில் கோரவிபத்து இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கியும் காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கியும் சென்று கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த ஏனைய 2 மோட்டார் சைக்கிள் அந்த மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக சுண்ணாகம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் போது ஐந்து பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--