Sep 12, 2025 - 05:43 PM -
0
கொமர்ஷல் வங்கி, Visaவுடன் இணைந்து, Visa சர்வதேச பயன்பாட்டு ஊக்குவிப்புக் காலத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது அட்டைதாரர்களுக்கு மறக்க முடியாத ஆடம்பரப் பயண அனுபவங்களை வெல்லும் வாய்ப்பை வழங்குகின்ற ஓர் புதிய ஊக்குவிப்புத் திட்டமாகும்.
கொமர்ஷல் வங்கியின் அனைத்து தனிப்பட்ட Visa வரவு மற்றும் கடன் அட்டைதாரர்களுக்கும் இவ் ஊக்குவிப்புக் காலமானது, 2025 நவம்பர் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இணையத்தள மற்றும் விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளும் சர்வதேச ரீதியிலான பரிவர்த்தனைகளுக்கு Visa அட்டைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஊக்குவிப்புத் திட்டத்திற்கு தகுதி பெற, வாடிக்கையாளர்கள் இவ் ஊக்குவிப்புக் காலத்தில் தகுதி வாய்ந்த சர்வதேசக் கொடுப்பனவுகளுக்கு குறைந்தபட்சம் ரூ. 200,000 யை செலவிட வேண்டும். இதன் மூலம் செலவிடப்படும் ஒவ்வொரு ரூ. 200,000 க்கும் ஆறு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் குலுக்கல் சீட்டிழுப்பு ஒன்றில் நுழைவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலதிகமாக, இவ் ஊக்குவிப்புக் காலத்தில், ரூ. 1 மில்லியனுக்கும் அதிகமான தகுதிவாய்ந்த கொடுப்பனவுகளை மேற்கொள்பவர்கள் மேலும் ஜந்து சீட்டிழுப்புகளுக்கான வாய்ப்புகளைப் பெறுவதோடு அவர்களின் வெற்றி வாய்ப்புகளை இது கணிசமாக அதிகரிக்கச் செய்யும்.
இப் பிரமாண்டமான பரிசினை வெல்பவர் சிங்கப்பூருக்கு இரண்டு நபர்களாக சொகுசுப் பயணம் மேற்கொள்ளும் அதிர்ஷ்ட வாய்ப்பைப் பெறுவார். இச்சலுகையானது வர்த்தக வகுப்புக்கான இரு வழி விமானப் பயணச்சீட்டுகள் மற்றும் சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான அதி சொகுசு விடுதிகளில் ஒன்றில், இரண்டு இரவுகள் தங்குவதற்கான வசதிகளையும் உள்ளடக்கியதாகும். ஏனைய வெற்றியாளர்களுக்கு சிங்கப்பூருக்கு இரண்டு விடுமுறைப் பக்கேஜுகளும், மாலைதீவுக்கு மூன்று விடுமுறைப் பக்கேஜுகளும் வழங்கப்படும், இது இந்த ஆண்டு அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மிகவும் கவர்ச்சிகரமான ஊக்குவிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.
எமது நீண்டகால பங்குதாரரான Visaவுடன் இணைந்து இந்த ஊக்குவிப்புக் காலத்தை தொடங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், இதன் மூலமாக எமது அட்டைதாரர்களுக்கு கவர்ச்சிகரமான வெகுமதிகளை வழங்க முடியும், என்று கொமர்ஷல் வங்கியின் தனிநபர் மற்றும் சில்லறை வணிக வங்கியியல் உதவிப்பொது முகாமையாளர் திரு. கபில லியனகே கூறினார். இந்த முயற்சியானது நம்பமுடியாத பரிசுகளை வழங்குவது மட்டுமல்லாது எமது வாடிக்கையாளர்கள் பயணம் செய்யும்போதோ அல்லது இணையத்தில் கொள்வனவுகளை மேற்கொள்ளும் போதோ அவர்களுக்கு சிறந்த கொடுப்பனவு அனுபவத்தை வழங்குவதுமாகும். சர்வதேசரீதியான பரிவர்த்தனைகளுக்கு அட்டைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டிய அவசியத்தை நாம் உணர்கிறோம். இந்த ஊக்குவிப்பானது எமது விசுவாசமான வாடிக்கையாளர்களின் ஈடுபாட்டை மேலும் அதிகரிப்பதோடு அவர்களுக்கு உண்மையான பெறுமதியையும் வழங்கும் என நாம் நம்புகிறோம்.
உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகத் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

