Sep 13, 2025 - 07:55 AM -
0
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 146 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
மென்செஸ்டரில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 304 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிரடியாக துடுப்பாடிய Phil Salt ஆட்டமிழக்காமல் 60 பந்துகளுக்கு முகம் கொடுத்து 8 சிக்சர்கள், 15 பவுண்டரிகள் உள்பட 141 ஓட்டங்களை குவித்தார்.
அதேநேரம் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை Phil Salt படைத்தார். இவர் 39 பந்தில் சதமடித்தார்.
போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 126 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவர் 30 பந்தில் 7 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 83 ஓட்டங்களை பெற்றார்.
இதையடுத்து, 305 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.
அணியின் தலைவர் Aiden Markram மாத்திரம் அதிரடியாக ஆடி 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில், ஏனைய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 16.1 ஓவர்கள் நிறைவில் 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பில் Jofra Archer 3 விக்கெட்டுக்களையும், Liam Dawson, Sam Curran மற்றும் Will Jacks தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதற்கமைய இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளன.

