Sep 13, 2025 - 04:03 PM -
0
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி பதவியேற்றுள்ளார்.
நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள் கடந்த 8-ஆம் திகதி போராட்டத்தில் குதித்தனர்.
இது வன்முறையாக முடிந்தது.பொலிஸார் கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்த நிலையில், 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 51-ஆக உயர்ந்தது.இதனால், நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பதவியிலிருந்து விலகினார்.
அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், ஜனாதிபதி, இராணுவம் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி (அல்லது சுஷிலா கார்கி) பதவியேற்றார்.
தேர்தல் நடத்தி புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை அவர் இப்பதவியில் தொடர்வார் என தெரிவிக்கப்படுகிறது.