Sep 13, 2025 - 04:49 PM -
0
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நாளை துபாயில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், ஆசியக் கோப்பைக்கான பயிற்சியின்போது இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா அணிந்திருந்த கைக்கடிகாரம் இணையத்தில் வைரலானது. இந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.18 கோடி ( இந்திய ரூபாய்) மதிப்புடையது என தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே இதுபோல் 50 கைக்கடிகாரங்கள் மட்டுமே உள்ளன. பிரபல நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடாலும் இதே கைக்கடிகாரம் ஒன்றை வைத்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா வைத்துள்ள கைக்கடிகாரத்தின் விலை ஆசியக் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பணத்தை விட (ரூ.2.6 கோடி) பல மடங்கு அதிகம் என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

