Sep 14, 2025 - 10:40 AM -
0
நடிகை ஐஷ்வர்யா லட்சுமி மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பல படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.
இவர் இந்த ஆண்டு தக் லைஃப் மற்றும் மாமன் ஆகிய படங்களில் நடித்தார்.
அடுத்ததாக, கட்டா குஸ்தி 2, கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மலா, மற்றும் பிஸ்மி ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவது வழக்கம்.
இந்நிலையில், ஐஷ்வர்யா ஒரு முக்கிய முடிவை எடுத்து, சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: "இந்தத் துறையில் பலருடன் பழகவும், கற்றுக்கொள்ளவும் சமூக ஊடகங்களுக்கு வந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் அது என்னைக் கட்டுப்படுத்தத் தொடங்கியது. என்னுள் இருக்கும் குழந்தைத் தன்மையை அது அழித்துவிட்டது. சிறு தருணங்களில் மகிழ்ச்சியடைய முடிவதில்லை. எனது சுய சிந்தனையையும் அது பறித்துவிட்டது."

