Sep 14, 2025 - 03:33 PM -
0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'கூலி' படத்தில் ஹிந்தி நடிகர் அமிர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.
அந்தப் படத்தில் தான் நடித்தது மிகப் பெரும் தவறு என அமிர்கான் ஒரு பேட்டியில் சொன்னதாக கடந்த சில நாட்களாக எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
அது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமிர்கான் தரப்பில் அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
“அமிர்கான் இதுபோன்ற எந்த பேட்டியும் அளிக்கவில்லை, மற்றும் 'கூலி' திரைப்படம் குறித்து எந்த எதிர்மறை கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
ரஜினிகாந்த், லோகேஷ் மற்றும் 'கூலி' படத்தின் முழு குழுவினரையும் அமிர்கான் மிக உயர்ந்த மரியாதையுடன் பார்க்கிறார். இந்த படம் உலகளவில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இது அதன் வெற்றியை தானே பேசுகிறது," என்று குறிப்பிட்டுள்ளனர்.

