Sep 14, 2025 - 06:07 PM -
0
முன்னாள் உலக குத்துச் சண்டை சம்பியனான ரிக்கி ஹாட்டன் தமது 46 வயதில் காலமானார்.
கிரேட்டர் மான்செஸ்டரின் டேம்சைடில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை எனவும் அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
ஹாட்டன் இரண்டு எடைபிரிவுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
தி ஹிட்மேன் என்று பலராலும் அறியப்பட்ட அவர், 21 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்த காலப்பகுதியில் மிகவும் பிரபலமானவராவார்.

