விளையாட்டு
இந்தியா - பாகிஸ்தான் போட்டி - பார்வையாளர்களுக்கு கடுமையாகும் தண்டனை

Sep 14, 2025 - 07:12 PM -

0

இந்தியா - பாகிஸ்தான் போட்டி - பார்வையாளர்களுக்கு கடுமையாகும் தண்டனை

ஆசிய கிண்ணத் தொடரில் பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

இன்றிரவு 8 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் குழப்பம் காரணமாக பாதுகாப்பு தொடர்பான கேள்வி எழுந்துள்ளது. 

இதனால் போட்டி இடம்பெறும் டுபாய் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு காரணிகளை கருத்திற்கொண்டு பொலிஸாரினால் பார்வையாளர்களுக்கு புதிய விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பொலிஸாரின் விதிகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபாய் முதல் 7 இலட்சம் ரூபாய் வரையில் அபராதமும், சிறைத்தண்டனை அல்லது நாடு கடத்தப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி சுப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05