Sep 15, 2025 - 11:58 AM -
0
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ். நகரப் பகுதியில் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் 40 மற்றும் 54 வயது உடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 27 கிராம் 100 மில்லி கிராம் அளவுடைய ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வட மாகாண குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--

