Sep 15, 2025 - 12:01 PM -
0
நேற்று (14) யாழ்ப்பாணம் - திருநகர் பகுதியில் 530 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--

