Sep 15, 2025 - 02:27 PM -
0
தனது படைப்பாக்கக் கூர்மையின் மகத்துவம் மற்றும் வர்த்தகநாம வலிமை ஆகியவற்றை மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தும் வண்ணம், முதல்முறையாக இலங்கையில் இடம்பெற்ற பிரசித்தி பெற்ற Dragons of Sri Lanka விருதுகள் நிகழ்வில் மதிப்புமிக்க இரு விருதுகளை ஹட்ச் நிறுவனம் வென்றுள்ளது.
மிகவும் போட்டி நிலவிய சிறிய தொகையுடன் பாரிய விளைவை ஏற்படுத்திய (Small Budget, Big Impact) பிரிவில் தனது Motherhood Unboxed பிரச்சாரத்திற்காக தங்க விருதை தனதாக்கிய இந்த தொலைதொடர்பாடல் வர்த்தகநாமம், பாரிய தொகையை செலவிடாது, நோக்கம் சார்ந்த கதைப்படைப்பு மற்றும் கூர்மைமிக்க படைப்பாக்கம் ஆகியன எந்த அளவுக்கு மிகச் சிறந்த பெறுபேறுகளை வழங்கும் ஆற்றல் கொண்டவை என்பதை இவ்வங்கீகாரத்தின் மூலமாக அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. Ngage Strategic Alliance நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இப்பிரச்சாரம், நேயர்கள் மத்தியில் ஆழமாக எதிரொலித்து, விளம்பர முகவர் நிறுவனத்தின் படைப்பாக்க வலிமையைக் காண்பித்துள்ள அதேசமயம், வாடிக்கையாளர்களுடன் அர்த்தபூர்வமான வழியில் பிணைப்பை ஏற்படுத்தி, தொழில்துறையில் தனித்துவமாகத் திகழ்வதில் ஹட்ச் நிறுவனத்தின் ஆற்றலையும் எடுத்துக்காட்டியுள்ளது.
இச்சாதனையை மேலும் சிறப்பிக்கும் வகையில், மிகவும் தனித்துவமான அதியுயர் நத்தார் கோபுர (Tallest Christmas Tower) முயற்சிக்காக, புத்தாக்கமான சிந்தனை (Innovative Idea) அல்லது எண்ணக்கரு (Concept) பிரிவில் Black Dragons அங்கீகாரத்தையும் சம்பாதித்துள்ளது. பண்டிகைக்கால உற்சாக உணர்வை உயிர்ப்பித்து, புத்தாக்கத்தின் மீது இவ்வர்த்தகநாமத்தின் துணிச்சலான அணுகுமுறையைக் காண்பிக்கும் விளம்பர செயல்பாடாக இது அமைந்தது. Thomspson Associates (TBWA) கூட்டாண்மையுடன் பெறப்பட்ட இவ்விருது வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து, எல்லைகளை தகர்க்கின்ற மறக்க முடியாத அனுபவங்களைத் தோற்றுவிப்பதில் ஹட்ச் நிறுவனத்தின் திறமையை எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த அங்கீகாரங்கள் இலங்கையில் மாத்திரமன்றி, பிராந்தியத்தின் மத்தியிலும் அலைகளைத் தோற்றுவிக்கும் நம்பிக்கை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் தனித்துவத்தைக் காண்பிப்பதில் ஹட்ச் நிறுவனத்தின் ஸ்தானத்தை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. மிகவும் அபிமானம் பெற்ற தொலைதொடர்பாடல் வர்த்தகநாமங்களில் ஒன்றாக மாறுவதை நோக்கிய அதன் பயணத்தில் மையத்தில் வலுவான சிந்தனைகள், வாடிக்கையாளர் மீதான நோக்கம், மற்றும் ஒத்துழைப்புடனான கூட்டாண்மைகள் ஆகியன காணப்படுவதை இத்தகைய அங்கீகாரங்கள் மூலமாக ஹட்ச் தொடர்ந்தும் நிரூபித்து வருகிறது.

