உலகம்
வெனிசுலா கப்பல் ஒன்றை அழித்ததாக அமெரிக்கா அறிவிப்பு

Sep 16, 2025 - 09:00 AM -

0

வெனிசுலா கப்பல் ஒன்றை அழித்ததாக அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவிற்கு செல்லும் வழியில் சர்வதேச கடல் பகுதியில் போதைப்பொருளுடன் பயணித்ததாகக் கூறப்படும் வெனிசுலா கப்பலை அமெரிக்க இராணுவம் அழித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்டிரம்ப் தெரிவித்துள்ளார். 

"வன்முறை போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள்" மீதான தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும் அந்த கப்பலில் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்றதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் வௌியிடவில்லை. 

இந்நிலையில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கராகஸ் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அறிவித்தார். 

வெனிசுலா ஜனாதிபதி உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகச் செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை விநியோகிப்பதாகவும் அமெரிக்க குற்றஞ்சாட்டி வருகின்றது. 

அத்துடன் அவ்வப்போது தாக்குல்களையும் நடத்தி வருகின்றது. 

இது இருநாடுகளிடையேயும் பற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05