Header Logo

இந்தியா
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டி?

Sep 16, 2025 - 11:22 AM -

0

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டி?

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் கடந்த 13 ஆம் திகதி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதியில் இருந்து ஆரம்பமாகியது. இதில் அவருக்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கு வெளிப்பட்டது. 

திருச்சியை குலுங்கும் அளவுக்கு மக்கள் கடலில் விஜய் நீந்தி சென்றார். திருச்சி விமான நிலையத்திலிருந்து அவரின் பிரசார வாகனம் மரக்கடை பகுதிக்குச் செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது. சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உத்தேசித்து, திட்டமிட்டே மரக்கடையில் இருந்து பிரசாரத்தை தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. 

காரணம், ஏற்கனவே எடுத்த பல சர்வே முடிவுகள் திருச்சி கிழக்கு தொகுதி தமிழக வெற்றி கழகத்திற்கு பெரிதும் சாதகமாக இருப்பதை தெரிவித்துள்ளது. 

இந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த யார் போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தாமே களம் இறங்கினால் எளிதில் வெற்றி வாகை சூடலாம் என கருதுகிறார். 

சமீபத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு சர்வேக்களில் விஜய்க்கு முதல் தர மாநகரங்களான சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் செல்வாக்கு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. 

அதேபோன்று வட தமிழகம், கொங்கு பகுதிகளிலும் நல்ல செல்வாக்கு இருப்பதாக அந்த கருத்துக்கணிப்புகள் உறுதிபட தெரிவித்துள்ளன. 

ஆனால் திருச்சி கிழக்கு தொகுதி தவிர்த்து டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் அவருக்கு செல்வாக்கு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. 

ஆகவே தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி கிழக்கு தொகுதியில் தான் நிற்கும் பட்சத்தில் அதன் தாக்கம் குறைவாக இருக்கும் டெல்டா மாவட்டங்களில் வாக்கு வங்கியை உயரச் செய்யும் என விஜய் நம்புகிறார்.


MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title