Sep 16, 2025 - 02:20 PM -
0
கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹா பள்ளிவாசலுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
தெல்தோட்டை பிரதேசத்தில் இருந்து கண்டி நகருக்கு சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், கலஹா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில், பாதை மாறிய ஒரு பெண்ணுடன் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 73 வயதுடைய பெண், கலஹா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் சாரதியை கைது செய்த கலஹா பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
--