சினிமா
விபத்தில் சிக்கிய கூமாபட்டி தங்கபாண்டியன்

Sep 16, 2025 - 02:58 PM -

0

விபத்தில் சிக்கிய கூமாபட்டி தங்கபாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் இணையத்தில் ட்ரெண்டானது.


தங்கபாண்டியன் என்பவர் தனது இன்ஸ்டா ஐடியில் கூமாப்பட்டி ஊருக்கு வாருங்கள் என்று அந்த ஊரின் அருமை பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இவரது வீடியோக்கள் அனைத்தும் வைரலானதை தொடர்ந்து பல மக்கள் அந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கினர்.


'மன அழுத்தமா?, விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க... கூமாப்பட்டி ஒரு தனி தீவு... இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர்... என்று அவர் பேசிய வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.


இதனிடையே கூமாப்பட்டி பிளவக்கல் அணை பகுதியில் பொதுமக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி இல்லை என்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஏமாற வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனர்.


இதனால் கூமாபட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.


இதன்மூலம் பிரபலமான தங்கபாண்டியன் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார். மேலும் ஒரு இன்ஃப்லூயுன்சராக அவதாரம் எடுத்தார்.


இந்நிலையில் கூமாப்பட்டி தங்கபாண்டியன் பேருந்தில் வரும்பொழுது கதவு இடித்து கை முறிவு ஏற்பட்டுள்ளது. இது பேருந்து ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நடந்தது என அவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05