சினிமா
அவமானமாக உணர்ந்தேன் - மனம் திறந்த நடிகை

Sep 16, 2025 - 06:48 PM -

0

அவமானமாக உணர்ந்தேன் - மனம் திறந்த நடிகை

தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. 

அதன்பின் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக சர்வம் தாளமயம் படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளிக்கு பெரிய ரீச் கொடுத்த படம் தான் சூர்யாவின் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கிய இப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் மதுரைக்கார பெண்ணாக நடித்திருந்தார். 

பொம்மி கதாபாத்திரத்திற்காக தேசிய விருது, ஃபிலிம்பேர், சைமா விருது என பல விருதுகளை வென்றார். கடைசியாக தமிழில் ராயன் படத்தில் நடித்தவர் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். 

அபர்ணா பாலமுரளி ஒரு பேட்டியில் சோகமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அதில் அவர், பொது இடத்தில் அறிமுகமில்லாத ஒருவர் என்னிடம் வந்து, என்ன அபர்ணா மிகவும் குண்டாகிவிட்டீர்கள், நன்றாக சாப்பிடுவீங்க போல என கூறினார். அந்த நபர் சொன்னதும் நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். 

நான் அவரிடம் என் எடை கூடிவிட்டது என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம், இது போன்ற தனிப்பட்ட விமர்சனங்கள் பற்றி நீங்கள் எதுவும் பேசக்கூடாது என்றேன். மேலும், பொது இடங்களில் யாருடைய உடல் தோற்றம் குறித்து இத்தகைய கருத்துகளைச் சொல்வது தவறானது என்றேன். 

இந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டது, ஆனால், அது என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது என பேசியுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05