மலையகம்
இளைஞனின் மரணத்திற்கு நீதிக்கோரி போராட்டம்!

Sep 16, 2025 - 07:05 PM -

0

இளைஞனின் மரணத்திற்கு நீதிக்கோரி போராட்டம்!

புஸ்ஸல்லாவ ரொச்சைட் தோட்டம் வை.ஆர்.சீ பிரிவைச் சேர்ந்த இராமச்சந்திரன் புவனேஸ்வரன் (முரளி) என்ற 34 வயது இளைஞனின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. 

நள்ளிரவில் வழிதவறிச் சென்ற இளைஞனை திருடன் என நினைத்து பிரதேசவாசிகள் தாக்கி அதனை வீடியோவாக வெளியிட்டமையால் மன உளைச்சலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் குறித்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இச்சம்பவம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி ரொச்சைல்ட் தோட்டப் பகுதியில் இருந்து கொத்மலைக்கு வந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டம் இடம்பெற்ற பிரதேச செயலக வளாகத்துக்கு கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்நாயக்க வருகை தந்திருந்தார். போராட்டக்காரர்களுடன் கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கலந்துரையாடிய பின் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

--

Comments
0

MOST READ