சினிமா
சௌந்தர்யா சென்ற அதே விமானத்தில் நானும்..! மீனா வௌியிட்ட பகீர் தகவல்!

Sep 16, 2025 - 09:20 PM -

0

சௌந்தர்யா சென்ற அதே விமானத்தில் நானும்..! மீனா வௌியிட்ட பகீர் தகவல்!

நடிகை சௌந்தர்யா 1972-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் பிறந்தவர். இவர் கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர். 

 

தமிழில் பொன்னுமணி, படையப்பா, அருணாசலம், சொக்கத் தங்கம், தவசி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

 

2004 ஏப்ரல் 17 அன்று, தனது 31-வது வயதில், சௌந்தர்யா ஒரு துயரமான ஹெலிகொப்டர் விபத்தில் காலமானார். 

 

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில், சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல, மாறாக திட்டமிட்ட கொலை என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

தெலுங்கு நடிகர் மோகன்பாபு மற்றும் சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு இடையே நிலத் தகராறு இருந்ததாகவும், இதன் காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாகவும் சில சமூக ஆர்வலர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர். 

 

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை சௌந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு மறுத்துள்ளார்.

 

இந்நிலையில், நடிகை மீனா ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். சௌந்தர்யா பயணித்த அதே ஹெலிகொப்டரில் தானும் பயணிக்க வேண்டியிருந்ததாக அவர் கூறினார். 

 

"எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. சௌந்தர்யா நல்ல நபர், எனக்கு அற்புதமான தோழி. அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அன்றைய தினம் நடந்த அரசியல் பிரச்சாரத்திற்கு சௌந்தர்யாவுடன் வருமாறு என்னையும் அழைத்தார்கள். ஆனால், சூழ்நிலை காரணமாக அதைத் தவிர்த்துவிட்டேன்," என்று மீனா தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05