சினிமா
'குட் பேட் அக்லி' படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கம்!

Sep 17, 2025 - 10:32 AM -

0

'குட் பேட் அக்லி' படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கம்!

ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியான படம் அஜித் நாயகனாக நடித்த 'குட் பேட் அக்லி'. 

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டது. 

'குட் பேட் அக்லி' உலக அளவில் 230 கோடி ரூபா வசூல் செய்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கிடையே இசையமைப்பாளர் இளையராஜா, தமது மூன்று திரைப்படப் பாடல்கள் படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதால் அதற்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அதை ஏற்ற நீதிபதி பாடல்களை அப்படத்தில் இடைக்காலத் தடை விதித்து இருந்தார். 

இருப்பினும் நீதிமன்ற உத்தரவை மீறி குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இளையராஜா குற்றம்சாட்டினார். 

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்கள் நீக்கப்படாமல் இருந்தது. 

எனவே குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற தனது பாடலை நீக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளையராஜா மைத்ரி மூவீ மேக்கர்ஸ்கு அண்மையில் நோடீஸ் அனுப்பினார். 

இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு மத்தியில் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05