Sep 17, 2025 - 03:27 PM -
0
ஐபிஎல் 18 ஆவது சீசனின் துவக்கத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணி மிரட்டலாக செயல்பட்டது. முதல் 4 போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டதால், டெல்லி அணி நிச்சயம் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதன்பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென்று தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிய டெல்லி கேபிடல்ஸ் அணி, கடைசியில் 5 ஆவது இடத்தை மட்டும் பிடித்து, பிளே ஆப் முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அணியில் சில பலவீனம் இருக்கிறது. அதனை சரி செய்துவிட்டால், டெல்லி அணி Powerful அணியாக மாறிவிடும். இந்நிலையில், 19 ஆவது சீசனுக்கான ஏலத்திற்கு முன், 5 வீரர்களை டெல்லி கேபிடல்ஸ் அணி கழற்றவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்,
மெக்குர்க் - அவுஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி ஓபனர் மெக்குர்க்கை, ஐபிஎல் 2025 முதல் டெல்லி கேபிடல்ஸ் அணி கழற்றிவிட்டது. இதனைத் தொடர்ந்து, 18 ஆவது சீசனுக்கான ஏலத்தில், ரைட் டூ மேட்ச் கார்ட் பயன்படுத்தி, 9 கோடி மதிப்பில் மீண்டும் மெக் குர்க்கை வாங்கினார்கள். ஆனால், அதில் சிறப்பாக செயல்படவில்லை. 6 போட்டிகளில் 105.77 ஸ்ட்ரைக் ரேட்டில் 55 ஓட்டங்களை மட்டும்தான் எடுத்தார். இவரை வெளியேற்றினால், டெல்லி அணிக்கு பெரும் தொகை கிடைக்கும்.
முகேஷ் குமார் - துல்லியமான யார்க்கர்களுக்கு பேர்போன முகேஷ் குமாரை, 8 கோடி மதிப்பில் டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது. டெத் ஓவர்களில் அபாரமாக யார்க்கர்களை வீசி, எதிரணியை திணறடிப்பார் எனக் கருதப்பட்ட நிலையில், 12 போட்டிகளில், 10.32 எகனாமியில் 12 விக்கெட்களை மட்டும்தான் எடுத்தார். குறிப்பாக, டெத் ஓவர்களில் அதிக ஓட்டங்களை கசியவிட்டார். இவரை வெளியேற்ற டெல்லி அணி முடிவு செய்துள்ளது.
பாப் டூ பிளஸி - 18 ஆவது சீசனில், டூ பிளஸி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 9 போட்டிகளில் களமிறங்கி 22.44 சராணரி, 123.92 ஸ்ட்ரைக் ரேட்டில் 202 ஓட்டங்களைதான் எடுத்தார். அதிக வயதாகிவிட்டதால், டூ பிளஸியின் பிட்னஸிலும் பிரச்சினை இருக்கிறது. இதனால், பழைய மாதிரி, இவரால் சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை. இதனால், டெல்லி அணி இவரை விடுத்தால், உடனே டூபிளஸி ஓய்வு அறிவிக்கத்தான் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மோஹித் சர்மா - 2.2 கோடி மதிப்பில் டெல்லி கேபிடல்ஸில் இடம்பெற்ற மோஹித் சர்மா, 9 போட்டிகளில் விளையாடி வெறும் 2 விக்கெட்களைதான் எடுத்தார். எகனாமியும் 10.28 ஆக இருந்தது. இவரை மீண்டும் தக்கவைக்க வாய்ப்பே இல்லை. மேலும், இவருக்கு அதிக வயதாகிவிட்டதால், 18 ஆவது சீசன்தான், மோஹித் சர்மாவுக்கு கடைசி தொடராக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
துஷ்மந்த் சமீரா - இலங்கை அணியின் அதிவேக பந்துவீச்சாளர் துஷ்மந்த் சமீரா, 18 ஆவது சீசனில், 6 போட்டிகளில் 11.40 எகனாமியில் 4 விக்கெட்களைதான் எடுத்தார். தற்போது, இலங்கை அணிக்காக தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி வருகிறார்.
இருப்பினும், இவரை வெளியேற்றிவிட்டு, மாற்றாக தரமான பௌலரை வாங்க டெல்லி கேபிடல்ஸ் அணி முயற்சி செய்யும் எனக் தெரிவிக்கப்படுகிறது. ஐபிஎலில், மலிங்காவுக்கு பிறகு, இலங்கை அணியின் எந்த வேகப்பந்து வீச்சாளரும் தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.