சினிமா
சங்கர் கணேஷ் வைத்தியசாலையில் அனுமதி!

Sep 17, 2025 - 06:21 PM -

0

சங்கர் கணேஷ் வைத்தியசாலையில் அனுமதி!

தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

1967 ஆம் ஆண்டு மகராசி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சங்கர் கணேஷ்.

 

தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் தெலுங்கு என 50 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். சங்கர் கணேஷ் சென்னையில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், இன்று அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் வடபழனியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

திமுக முப்பெரும் விழாவிற்கு பாடல் பாடச் செல்லும்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05