Sep 18, 2025 - 07:17 AM -
0
கொமர்ஷல் வங்கியின் UnionPay ஆசிய Prestige டயமண்ட் மற்றும் ஆசிய Prestige பிளாட்டினம் கடனட்டைகளை வைத்திருப்பவர்களுக்கு பயனளிக்கும் கொமர்ஷல் வங்கிக்கும் LoungeKeyற்கும் இடையிலான பங்குடைமையைத் தொடர்ந்து, UnionPay ஆசிய Prestige திட்டத்தின் கீழ், விமான நிலைய LoungeKeyற்கான அணுகலை விரிவுபடுத்திய உலகின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி மாறியுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் இந்தப் புரட்சிகரமான சாதனையானது UnionPay ஆசிய Prestige அட்டைதாரர்களுக்கு 140க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,500க்கும் மேற்பட்ட விமான நிலைய ஓய்வறைகளின் வலையமைப்பை அணுகுவதற்கு அனுமதியளிப்பதுடன் இதற்கு, தனியான ஓய்வறை உறுப்புரிமை அல்லது கைபேசி பயன்பாடுகள் போன்றவை இல்லாமல், தமது அட்டையை வழங்குவதன் மூலம் இந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும். LoungeKey மூலம், அட்டைதாரர்கள் முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் உலகத்தரம் வாய்ந்த ஓய்வறை வசதிகளை அனுபவிக்க முடியும், இதில் இலவச உணவு மற்றும் பானங்கள், தனியார் இருக்கைப் பகுதிகள், அதிவேக Wi-Fi ஆகியவற்றை தடையின்றி அனுபவிக்க முடிவதுடன் பணிநிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வறைகளில் குளியலறை மற்றும் ஆரோக்கியநலன்சார் வசதிகள் ஆகியவையும் உள்ளடக்கப்படுகின்றன.
UnionPay ஆசிய Prestige டயமண்ட் அட்டைதாரர்கள் வருடந்தோறும் ஆறு அதிதிகளுக்கான பிரவேசங்கள் உட்பட எல்லையற்ற இலவச LoungeKey பிரவேசங்களுக்கான சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை ஆசிய Prestige பிளாட்டினம் அட்டைதாரர்கள் அதிதி பிரவேசங்கள் உட்பட வருடத்திற்கு ஆறு இலவச பிரவேசங்களுக்கான சலுகைகளுக்கும் உரித்துடையவர்களாகின்றனர். மேலதிகமாக, அட்டைதாரர்கள் தமது அட்டைகளைப் பயன்படுத்தி இருவழி பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போது இலவச பயணக் காப்புறுதிக்கும் தகுதியுடையவர்கள் ஆகின்றனர்.
இலங்கையில் முதன்முதலில் UnionPay அட்டைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய முதல் வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்கிறது. மேலும் இந்த முயற்சியானது UnionPay ஆசிய Prestige LoungeKey அணுகலை உலகளாவிய ரீதியில் பெறும் முதல் வங்கியாக பரிணமிப்பதற்கு பெரிதும் முன்னோடியாக அமைந்துள்ளது. UnionPay International என்பது உலகின் மிகப் பெரிய அட்டை சார் திட்டமாகும், இது 2,600க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து 183 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தனது வலையமைப்பை விஸ்தரித்துள்ளது.
உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகத் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.