Sep 18, 2025 - 07:33 AM -
0
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சென்னை வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டலை தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி வீட்டைத் தொடர்ந்து கவர்னர் மாளிகை, நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.