சினிமா
பாலிவுட் நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு!

Sep 18, 2025 - 08:11 AM -

0

பாலிவுட் நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு!

பாலிவுட் நடிகை திஷா படானிக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி நகரில் வீடு உள்ளது. இவரது வீட்டின் முன் கடந்த 12 ஆம் திகதி அதிகாலை இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், வானத்தை நோக்கியும் சுட்டுள்ளனர். அப்போது திஷா படானியின் தந்தை ஜெக்திஷ் சிங் படானி (ஓய்வு பெற்ற டிஎஸ்பி), அவரது தாய் மற்றும் மூத்த சகோதரி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. 

துப்பாக்கியால் சுட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிடப்பட்டது. 

இந்து துறவிகள் பிரேமானந்த் மகாராஜ், அனிருதாசார்யா மகாராஜ் ஆகியோரை இழிவுப்படுத்தியதற்காக திஷா படானி வீடு மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

"வீரேந்திர சரண், மகேந்திர சரண் ஆகியோர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நாங்கள் அதை செய்தோம். எங்களுடைய மதிற்குரிய துறவிகளை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். சனாதன தர்மத்தை இழிவுப்படுத்த முயன்றார். எங்களுடைய தெய்வங்ளை இழிவுப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. இது வெறும் டிரைலர்தான். அடுத்த முறை, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உயிரோடு இருக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரார் பதிவிட்டிருந்தார். இவருக்கு கிரிமினல் அமைப்பு நெட்வொர்க் உடன் தொடர்பு உள்ளது. இதனால் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரையும் தேடிவந்தனர். உத்தர பிரதேச மாநிலத்தின் சிறப்பு அதிரடிப்படையின் நொய்டா குழு மற்றும் டெல்லி பொலிஸின் குற்ற புலனாய்வுத்துறை குழு ஆகியவை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின. 

அப்போது காசியாபாத்தில் இருவரும் இருப்பதை கண்டறிந்து அங்கு சென்றனர். அப்போது பொலிஸார் நோக்கி இருவரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் பொலிஸார் தாக்கல் நடத்த இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். பின்னர், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து, வைத்தியசாலைக்கு அவர்களை கொண்டு சென்றுள்ளனர். அங்கு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05