Sep 18, 2025 - 12:06 PM -
0
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (18) தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.
அமர்வில், மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சந்தைகளின் அபிவிருத்தி தொடர்பாக விவாதம் எழுந்தது. இதன்போது உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது. இதனால் சபை தவிசாளரின் கட்டுப்பாட்டை மீறியது.
இந்நிலையில் திடீரென கோபமடைந்த தவிசாளர், இனி சபையை கடுமையாக நடாத்த வேண்டிய தேவை ஏற்படும். கதைப்பதற்கு இனி அனுமதி தர முடியாது. திருப்பி எதிர்த்து கதைக்காதீர்கள் என உறுப்பினர்கள் மீது பாய்ந்தார்.
இதன்போது உறுப்பினர்கள், எமக்கு கதைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். கதைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என நீங்கள் கூற முடியாது என்றனர். இதன்போது சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
--