வடக்கு
யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

Sep 18, 2025 - 12:21 PM -

0

யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்ட செயலாளர் எம்.பிரதீபன், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். 

யாழ். மாவட்டத்தில் போக்குவரத்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் பற்றி இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன. 

எவ்வாறான பகுதிகளில் வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது, எப்பகுதிகளுக்கு விசேட போக்குவரத்து சேவை தேவைப்படுகின்றது உள்ளிட்ட விடயங்களை அமைச்சர் சுட்டிக்காட்டிருந்தார். 

அதேபோல தீவு பகுதிகளுக்குரிய பாதுகாப்பான கடல்போக்குவரத்து பயணம் மற்றும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்திருந்தார். 

நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்து யாழ். மாவட்டத்தை மையப்படுத்தியதான பொதுபோக்குவரத்து, வர்த்தக போக்குவரத்து மற்றும் சந்தை நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து என்பன பற்றியும் கவனம் செலுத்தப்பட்டன.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05