Sep 18, 2025 - 01:54 PM -
0
பொகவந்தலாவ பிரதேச வைத்திய சாலையிலிருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி இன்று (18) விபத்துக்குள்ளானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் இருந்து நோயாளர் ஒருவரை டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று கொண்டிந்த போது நோர்வூட் பகுதியில் இருந்து வெஞ்சர் பகுதிக்கு சென்ற பால் லொறி நோயாளர் காவு வண்டியில் மோதுண்டமையினால் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொகவந்தலாவ நோயாளர் காவு வண்டியில் இருந்த நோயாளரை டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் உள்ள நோயாளர் காவு வண்டியினை வரவலைத்து நோயாளர் கவனமாக அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் போக்குவரத்து சுமார 30நிமிடங்கள் பாதிக்கபாபட்டிருந்த நிலையில் நோர்வூட் பொலிஸிரின் தலையீட்டினால் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
இதேவேளை சம்பவம் தொடர்பாக பால் லொறியின் சாரதி நோர்வூட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
--