வணிகம்
SLIIT Business School வழங்கிய Soft Skills+ 2025 நிகழ்வு நாளைய தலைவர்களுக்கு வலுவூட்டியுள்ளது

Sep 18, 2025 - 03:55 PM -

0

SLIIT Business School வழங்கிய Soft Skills+ 2025 நிகழ்வு நாளைய தலைவர்களுக்கு வலுவூட்டியுள்ளது

இன்றைய சக்திவாய்ந்த உலகில் அத்தியாவசியமான தனிப்பட்ட மற்றும் தொழில்சார் திறன்களை பாடசாலை மாணவர்கள் மத்தியில் வளர்க்கும் தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியவாறு, தொடர்ந்து 11 வது ஆண்டாக Soft Skills+ 2025 நிகழ்வை SLIIT Business School வெற்றிகரமாக நடாத்தியுள்ளது. இந்த ஆண்டு நிகழ்வில் ஈடுபாடுகளை வளர்க்கும் செயலமர்வுகள், மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான வினாவிடைப் போட்டி, மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் போட்டி என பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கியிருந்ததுடன், நாடெங்கிலுமுள்ள பாடசாலைகளை இதில் பங்கேற்கும் வண்ணம் ஈர்த்தது. 

2025 மே 3 அன்று SLIIT பிரதான கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு, வர்த்தகம் மற்றும் விஞ்ஞானங்கள் அடங்கலாக, அனைத்து துறைகளிலும் கற்கும் தரம் 11 முதல் 13 வரையான மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரச, தனியார், மற்றும் சர்வதேச பாடசாலைகளிலிருந்து அணிகள் பங்குபற்றின. வழக்கமான பாடவிதானத்தில் பெரும்பாலும் கவனிக்கத் தவறவிடப்படுகின்ற மென்திறன்கள் தொடர்பில் காணப்படும் இடைவெளியைப் போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்நிகழ்ச்சித்திட்டம், பாடசாலை சிரேஷ்ட மாணவர்கள் மத்தியில் தலைமைத்துவம், ஒன்றுபட்ட உழைப்பு, படைப்பாற்றல் மிக்க வழியில் சிந்தித்தல், மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன்கள் ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளது. 

PMF Finance PLC ன் பணிப்பாளர் திரு. பண்டார ரெகோகம அவர்கள் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளதுடன், வர்த்தகத் துறையில் மென்திறன்களுக்கு அதிகரித்து வருகின்ற அங்கீகாரம் குறித்து சுட்டிக்காட்டினார். 

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கான பல்வேறு செயலமர்வுகள் இடம்பெற்றன. “தன்னம்பிக்கைமிக்க எதிர்காலத்திற்காக மென்திறன்களில் கைகேர்ந்தவராக மாறுதல்” (Mastering Soft Skills for a Confident Future) என்ற தலைப்பிடப்பிட்ட மாணவர்களுக்கான செயலமர்வை வைத்தியர் நிலங்க அபேசிங்க அவர்கள் நடாத்தியதுடன், மாணவர்களுடன் நேரடியாக ஈடுபாடுகளைப் பேணிய அமர்வாக SLIIT கேட்போர்கூடத்தில் இது அமையப்பெற்றது. மேலும், “திறன்மிக்க வழியில் கற்பிப்பதற்கு மென்திறன்களை மேம்படுத்தல்” (Enhancing Soft Skills for Effective Teaching) என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கான செயலமர்வு 2025 ஏப்ரல் 24 அன்று பேராசிரியர் ரேணுகா ஹேரத் அவர்களால் நிகழ்நிலை அமர்வாக நடாத்தப்பட்டது. நாடளாவியரீதியில் அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் இதற்கு வாய்ப்பளிக்கப்பட்டதுடன், அன்றாட வகுப்பறை செயற்பாடுகளில் மென்திறன்களை ஒருங்கிணைப்பதற்கான நடைமுறை நுண்ணறிவுகளை இச்செயலமர்வு அவர்களுக்கு வழங்கியது. 

இதில் பங்குபற்றியவர்களின் ஆர்வத்துடனான ஈடுபாட்டை அங்கீகரிக்கும் வகையில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகளின் உச்சமாக, பாடசாலைகளுக்கு இடையிலான வினாவிடைப் போட்டி அமைந்ததுடன், இரு முதற்சுற்று வினாவிடைகளுடன், இறுதியாக படைப்பாக்க சவால் சுற்றுடன், மென்திறன்கள் குறித்த மாணவர்களின் அறிவு மற்றும் பிரயோகத்தை சோதித்தது. நேரடி நிகழ்வாக இடம்பெற்ற இப்போட்டியில் 22 பாடசாலைகளிலிருந்து 45 க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றி, போற்றத்தக்க வகையில் ஒருமித்த உழைப்பு, மூலோபாயரீதியாக சிந்திக்கும் ஆற்றல், மற்றும் உற்சாகம் ஆகியவற்றைக் காண்பித்தன. மாத்தறை புனிய சர்வேசியஸ் கல்லூரி அணி ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக வலம்வந்ததுடன், இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி அணிகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன. 

“Soft Skills+ என்பது வெறுமனே ஒரு நிகழ்வு மாத்திரம் அல்ல, அது எமது இளைஞர்,யுவதிகள் மற்றும் சமுதாயத்தின் மீதான முதலீடு,” என SLIIT Business School ன் பீடாதிபதி பேராசிரியர் சுரேன் பீட்டர் அவர்கள் குறிப்பிட்டார். “ஆரம்பத்திலேயே அத்தியாவசிய மென்திறன்களை மாணவர்கள் மத்தியில் வளர்ப்பதன் மூலமாக, மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பி, ஏனையவர்களிடமிருந்து ஆராய்ந்து, கேட்டு, கற்றுக்கொள்வதற்கு இளம் சிந்தனையாளர்களுக்கு வலுவூட்டி, தமது அன்றாட பணிகளில் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புத்தாக்கமாகவும், படைப்பாற்றலுடனும் சிந்தித்து, வழிநடாத்தும் ஆற்றலை நாம் முன்னெடுக்கிறோம். பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்துடன் இந்த மென்திறன்களும் ஒன்றுசேர்ந்து, வணிகத் துறை தலைவர்களின் அடுத்த தலைமுறையை விருத்தி செய்வதற்கு மூலகருவியாக அமையும்”. முழுமையான கல்வியை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற ஒரு கல்வி நிறுவனம் என்ற வகையில், மாணவர்கள் கல்வித்தகமை ரீதியாக தேர்ச்சி பெற்றவர்கள் மாத்திரமன்றி, வாழ்விலும், தொழிலிலும் வெற்றி காண்பதற்குத் தேவையான முக்கியமான மனிதத் திறன்களைக் கொண்டவர்களாக இருப்பதை உறுதி செய்து, சகலாகலாவல்லவர்களாக மனிதர்களை வளர்க்கும் பணியை SLIIT Business School தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்து வருகிறது.

Comments
0

MOST READ