வணிகம்
நிறுவன விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான சிறப்பு சலுகைகளை வழங்கும் Cinnamon Life at City of Dreams

Sep 18, 2025 - 04:01 PM -

0

நிறுவன விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான சிறப்பு சலுகைகளை வழங்கும் Cinnamon Life at City of Dreams

வணிக உறவுகளுக்கும், சந்திப்புகளுக்கும் புதிய பரிமாணம் அளிக்கும் வகையில், வணிக நிறுவனங்களுக்கு சிறப்பு விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான தொகுப்புகளை அறிமுகப்படுத்த Cinnamon Life at City of Dreams நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்கீழ், ஒரு நபருக்கு 9,000/- ரூபா முதல் ஆரம்பிக்கும் சிறப்பு வார நாட்கள் தொகுப்புடன், திங்கள் முதல் வியாழன் வரை குறைந்த விலையில் தங்கள் நிறுவன விழாக்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்தும் வாய்ப்பு அனைத்து நிறுவனங்களுக்கும் கிடைக்கிறது. 

ஒக்டோபர் மாதம் முழுவதும் நடைபெறும் முக்கியமான கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளுக்கு இந்த சலுகையைப் பெற முடியும், இதன்மூலம் உயர்தர வசதிகளுடன், ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கும் ஏற்ற வகையில் தரமான சேவைகளை முழுமையாக வழங்க Cinnamon Life at City of Dreams நடவடிக்கை எடுக்கும். 

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான Cinnamon Life at City of Dreams, வணிகம், பொழுதுபோக்கு மற்றும் ஆடம்பரத்தை ஒருங்கிணைத்து உலகத்தரம் வாய்ந்த வணிக சந்திப்புகளுக்கான சிறந்த இடமாக திகழ்கிறது. குறிப்பாக கொழும்பு நகரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆடம்பரமான சூழலில் ஓய்வு, மகிழ்ச்சி மற்றும் தனித்துவமான அனுபவத்தை வழங்க அர்ப்பணிப்புடன் செயல்படும் Cinnamon Life at City of Dreams இல் நடத்தப்படும் கூட்டங்கள் மற்றும் பல்வேறு விழா நிகழ்வுகள் நிச்சயமாக நிரந்தர நினைவுகளில் நிலைத்திருக்கும். 

உங்கள் கூட்டங்கள், விழாக்கள் மற்றும் வேறு எந்த நிகழ்வுக்காகவும் 160,000 சதுர அடிக்கும் மேல் இடவசதி கொண்ட, உங்களுக்குத் தேவையான விதத்தில் அமைக்கக்கூடிய இடங்களையும், சிறப்பான இடங்களையும் கொண்ட Cinnamon Life at City of Dreams, நெகிழ்வான மற்றும் அதிக பயனுள்ள அனுபவத்தை வழங்குவதன் மூலம் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். 

மேலும், சிறப்பு விழா நிகழ்வுகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு கலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஐந்து அழகான விருந்து மண்டபங்களில் (ballrooms) உங்கள் அழகிய தருணத்திற்கு மேலும் அழகு சேர்க்க இங்கு வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு விருந்து மண்டபமும் பல்வேறு கலை படைப்புகள் மற்றும் கட்டிடக்கலை சிறப்பம்சங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது உங்கள் நிகழ்வுக்கு தெளிவான வித்தியாசத்தையும் அழகையும் சேர்க்கும். 

விழா நிகழ்வுகளைக் கொண்டாடி மகிழ்ச்சியை அனுபவிக்க பொருத்தமான இடத்தைத் தேடும் அனைவருக்கும் Cinnamon Life at City of Dreams இன் “The Podium” ஒரு சொர்க்கமாக இருக்கும். 25,000 சதுர அடி பரப்பளவு கொண்ட பெரிய இடமான இங்கிருந்து இந்தியப் பெருங்கடலின் அழகை அனுபவித்தபடி குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது விருந்தினர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இது சிறந்த வாய்ப்பாகும். இது விழாவிற்கு மேலும் இனிமையான அனுபவமாக இருக்கும். மேலும், உயர்மட்ட நிறுவனக் கூட்டங்கள் அல்லது பெரிய அளவிலான கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கும் சிறந்த Cinnamon Life at City of Dreams சர்வதேச தரத்திலான வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, அந்த அனைத்து நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்த உதவுகிறது. இந்த அனைத்து வசதிகளுடன், உங்கள் சிறப்பு தருணத்தை குறைந்த செலவில் மேம்படுத்திக் கொள்ள இப்போது உங்கள் நிறுவனத்திற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

உங்கள் அடுத்த நிகழ்வைத் திட்டமிட, Cinnamon Life events குழுவை +94 77 162 9758 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05