Sep 18, 2025 - 07:34 PM -
0
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது.
இந்த போட்டி அபுதாபியில் இன்று இரவு 8:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இலங்கை அணி குழு Bயில் முன்னிலை வகிப்பதுடன், ஆப்கானிஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டிய்ல ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றால், அந்த அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.
ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளுடன் வெளியேறும். அப்போது, 4 புள்ளிகளுடன் இருக்கும் பங்களாதேஷ் இரண்டாவது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.
அதேநேரம் ஆப்கானிஸ்தான் இலங்கையை வீழ்த்தினால், அது புள்ளிப் பட்டியலை மிகவும் சிக்கலாக்கும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், அந்த அணியும் 4 புள்ளிகளைப் பெறும்.
அப்போது, ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ் ஆகிய மூன்று அணிகளுமே தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். இந்த நிலையில், நெட் ரன் ரேட் (Net Run Rate) அடிப்படையிலேயே முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தகுதி பெறும்.
நெட் ரன் ரேட் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் (+2.150) மற்றும் இலங்கை (+1.546) ஆகியவை மிகவும் வலுவான நிலையில் உள்ளன.
பங்காளதேஷ் அணியின் நெட் ரன் ரேட் (-0.270) மைனஸில் இருப்பதால், அவர்களின் வாய்ப்பு மிகவும் குறைவு.
இலங்கை அணி மிக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தால் மட்டுமே பங்காளதேஷிற்கு வாய்ப்பு கிடைக்கும்.
எனவே, ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், அந்த அணியும் இலங்கை அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறவே அதிக வாய்ப்புள்ளது.