செய்திகள்
தெஹிவளையில் சீன நாட்டவரின் சடலம் மீட்பு

Sep 18, 2025 - 08:28 PM -

0

தெஹிவளையில் சீன நாட்டவரின் சடலம் மீட்பு

தெஹிவளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டவரின் சடலம் தெஹிவளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்து தெஹிவளை அல்விஸ் வீதியில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த நாட்டில் தனியார் துறையில் பணிபுரியும் சீன நாட்டினர் குழு ஒன்று இந்த வீட்டிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்ததாகவும், குறித்த நபர் மேல் மாடியில் இருந்து விழுந்து இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

சடலம் தற்போது கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05