Sep 19, 2025 - 09:27 AM -
0
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் நேற்று (18) யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 120 மில்லிகிராம் ஹெரோயின் கைது செய்யப்பட்டவரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், குருநகரை சேர்ந்த 36 வயதுடைய சந்தேக நபராவார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--

