Sep 19, 2025 - 09:41 AM -
0
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித்த கமல் ஜினதாச, தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள், சீ நோர் நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
சீ நோர் படகு திருத்துமிடம் நெடுநாளாக இயங்கா நிலையில் இருந்தது. இதனால் படகு திருத்த பணிகளை மேற்கொள்வதில் மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இது தொடர்பில் அமைச்சர் சந்திரசேகரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இலங்கை மற்றும் இந்திய அரசின் 330 மில்லியன் நிதி உதவியின் கீழ் இன்று புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகின.
--

