Sep 19, 2025 - 10:32 AM -
0
இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மனையை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ். நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையை நேற்று (18) மாலை பார்வையிட்டனர்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இதனை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி சின்னத்தை பாதுகாப்பதற்கான செயற்பாட்டினை எடுப்பதாக உறுதியாளித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் உடைய வடக்கு கிழக்கு மக்களுடைய பூர்வீக அடையாளங்களை நிலை நிறுத்துகின்ற மிக முக்கியமாக சங்கிலிய மன்னன் வாழ்ந்த காலத்தில் இருந்த மந்திரி மனை கடந்த 17 ஆம் திகதி மழை காரணமாக ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது.
இதனை பார்வையிடுவதற்காக அமைச்சர்களானபோக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன் பார்வையிட்டனர்.
அவர்களுடன் தொல்லியல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துலஜீவ மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதன்போது மந்திரி மனையின் தற்போதைய நிலை தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
--

