Sep 19, 2025 - 12:47 PM -
0
சத்துருக்கொண்டான், கும்பலமடு பிரதேசத்தில் நேற்று (18) மாலை வெடிகுண்டு போன்று தோற்றமளிக்கும் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சத்துருக்கொண்டானைச் சேர்ந்த ஒருவர் கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளித்ததையடுத்து, கொக்குவில் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், குறித்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்ற உத்தரவு பெறப்படும் வரை, சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
--