சினிமா
என் மேல் இவ்வளவு வன்மம் ஏன்?

Sep 19, 2025 - 04:17 PM -

0

என் மேல் இவ்வளவு வன்மம் ஏன்?

பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் அண்மையில் காந்தி கண்ணாடி திரைப்படம் வெளியானது. இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. 

இதுமட்டும் அல்லாமல் பாலா மக்களுக்கு அவரால் முடிந்த பல உத்விகளை செய்து வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸ் மாற்றம் இயக்கத்தின் மூலமும் பல உதவிகளை செய்து வருகிறார். 

பெற்றோல் பங்கில் வேலை செய்த ஊழியருக்கு பைக் வாங்கி கொடுத்தது, முடியாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது என பாலா செய்த விஷயம் வைரலாகி கொண்டே இருந்தது. 

இந்நிலையில் பாலாவை சர்வதேச கைக்கூலி என பல விமர்சனம் செய்து வருகின்றனர். 

பாலா கொடுத்த ஆம்புலன்ஸ் நம்பரும் பொய்யாக இருப்பதாகவும் அவர் பித்தலாட்டம் செய்து வருவதாகவும் செய்தியாளர் ஒருவர் தொடர்ந்து பாலா மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது குறித்த பேட்டி ஒன்று வைரலான நிலையில் பலரின் பணத்தை தான் பாலா இப்படி உதவிகளாக செய்து விளம்பரம் தேடிக் கொள்வதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த வீடியோ வைரலான நிலையில் பாலாவை தொடர்ந்து பலரும் விமர்சிக்க தொடங்கி வருகின்றனர். இது குறித்து பதில் அளித்து இருக்கும் KPY பாலா என்னை சர்வதேச கைக்கூலி என்று கூறுவது எனக்கே அதிர்ச்சியாக தான் உள்ளது. நான் வண்டி வாங்கி தருகிறேன் என்றால் அதை அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்வார்கள். அதற்காகத்தான் வண்டியின் நம்பரை மறைத்துக் கொடுக்கிறேன். 

நான் செய்த உதவிகளுக்கெல்லாம் ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. நான் செய்த நிகழ்ச்சிகள், ப்ரோமோஷன், படங்களில் இருந்து வந்த வருமானத்தில் வைத்து தான் உதவிகள் செய்கிறேன். நான் கட்டி வருவது வைத்தியசாலை அல்ல சின்ன கிளினிக் மட்டுமே. அதுவும் நான் வீடு கட்ட வைத்திருந்த நிலத்தில் கட்டி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். 

இதற்கிடையில் பாலாவுடன் இருக்கும் பிரபலங்கள் உதவி செய்பவரின் குணத்தை பாராட்டாமல் இருந்தால் கூட பரவாயில்லை அவரை இப்படி குறை சொல்வது அதிர்ச்சியாக இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05