Sep 19, 2025 - 04:37 PM -
0
இந்தியாவின் அசாமை சேர்ந்த பிரபல பாடகர் ஜூபீன் கார்க் (வயது 52), சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் போது, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அசாம், பெங்கால், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
இன்று (19) ஸ்கூபா டைவிங்போது ஜூபின் கார்க்கிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ICU - வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் வடகிழக்கு வழாவில் (North East Festival) கலந்து கொள்வதற்கான ஜூபின் கார்க் சிங்கப்பூர் சென்றிருந்தார்.
டைவிங் போது மூச்சுவிடத் திணிறானர். இதனால் சிங்கப்பூர் ஜெனரல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக சிபிஆர் கொடுக்கப்பட்டது. அவரை காப்பாற்ற முயற்சி செய்தபோதிலும், மதியம் 2.30 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது என வடகிழக்கு விழா அமைப்பினர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை தெரிவிப்பது மிகுந்த வர்த்தம் அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
இது மிகவும் வேதனையான செய்தி மற்றும் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
மேலும், தனது எக்ஸ் பக்கத்தில்,
"இன்று அசாம் தனது விருப்பமான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. ஜுபீன் மாநிலத்திற்கு செய்ததை விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன். அவர் மிக விரைவாக சென்றுவிட்டார். இது செல்ல வேண்டிய வயது அல்ல" தெரிவித்துள்ளார்.

