Sep 20, 2025 - 11:50 AM -
0
இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று (19) சந்தித்து கலந்துரையாடினார்.
மரியாதை நிமித்தமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் உதவிகளுக்கும் உறுதியான ஆதரவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் பன்முக ஆதரவுகள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துக்கொண்டார்.
--

