Sep 20, 2025 - 02:28 PM -
0
சந்தை அபிவிருத்தி விடயம் தொடர்பாக மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டு தமிழரசு கட்சி உறுப்பினர்களிடையே கடுமையான கருத்து மோதல் இடம்பெற்றது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த 18 ஆம் திகதி தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இவ்வாறு கருத்து மோதல் இடம்பெற்றது.
பண்டத்தரிப்பு சந்தையில் அதிகளவான நிதி பயன்படுத்தப்பட்டு அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்றும் ஏனைய சந்தைகளுக்கும் நிதியை பகிர்ந்து அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் தமிழரசு கட்சியின் உறுப்பினர் தயாபரன் தெரிவித்தார்.
இதன் போது குறுக்கிட்ட பண்டத்தரிப்பு சந்தை அமைந்துள்ள வட்டாரத்தின் தமிழரசு கட்சியின் உறுப்பினரான மரியநேசன், நீங்கள் சுகாதாரக் குழுவில் இருக்கின்றீர்கள், நீங்கள் எந்தெந்த சந்தைக்கு சென்று ஆய்வு செய்து இருக்கிறீர்கள் என்று கூறுங்கள். இரண்டு மாதகாலம் ஆகியும் அனைத்து சந்தைகளுக்கும் விஜயம் செய்து கள ஆய்வு செய்யவில்லை என கூறினார்.
இதன்போது அங்கு பாரிய கருத்து மோதல் இடம்பெற்றது. இதன்போது சபையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தவிசாளர் ஜெசீதன் முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்தது. சண்டை பிடிப்பதற்கு இங்கு வரவில்லை. அனைவரும் கவனமாக இருங்கள் என தவிசாளர் கடுந்தொனியில் கூறினார்.
--

